கோலிவுட் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “மாமன்னன்”. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலான நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் லைவ் கான்சர்ட்டில் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
A musical evening underway⚡️????#MAAMANNAN songs Live performances by @arrahman on June 1st at Nehru Stadium
It’s gonna be bigger and grander. Save the date & be ready. @mari_selvaraj @Udhaystalin #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar… pic.twitter.com/ghS6Yx0Al8
— Red Giant Movies (@RedGiantMovies_) May 30, 2023