கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.
தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் “தளபதி 68” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் இப்படம் தொடர்பான அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
அதன் பிறகு இப்படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் முக்கிய பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘தளபதி 68’ திரைப்படத்தில் வில்லனாக கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளிவராமல் இருந்தாலும் இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
