Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனோபாலாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் MK ஸ்டாலின்

m-k-stalin-twitter-post-viral-about-manobala

கோலிவுட் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமைகளுடன் கம்பீரமாக வளம் வந்தவர் மனோபாலா. பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அனைவரையும் மகிழ்வித்து இவர் சின்னத்திரையில் நடைபெற்ற குக் வித் கோமாளி என்னும் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று இருந்தார்.

சமீப காலமாகவே கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மனோபாலா அவர்கள்  உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு ரசிகர்கள், திரைப்படங்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார், “அதில் அவர் மனோபாலா இறந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில் எனது புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்த தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.