Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லவ் டுடே படத்தின் மேக்கிங் வீடியோ வைரல்

love-today-movie-making-video

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கி பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ஹீரோவாக நடித்து இயக்கிய திரைப்படம் லவ் டுடே.

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் இப்படம் மொழி மாற்றம் செய்து ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகிய இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மேக்கிங் வீடியோவில் விஜய் பாடலான மாமா நான் உனக்கே தான் என்ற பாடலுக்கான காட்சி இடம்பெற்றுள்ளது.