Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படத்தின் BTS புகைப்படம் இணையத்தில் வைரல்

Lokesh kanagaraj Leo movie BTS photo

தமிழ் சினிமாவில் பிரமிக்க வைக்கும் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்து வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் . அனிருத் இசையமைப்பில் வரும் அக்டோபர் 19ஆம் ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் நாளுக்கு நாள் இப்படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் லியோ படப்பிடிப்பு தளமான பேக்கரி செட்டப்பில் படகுழுவுடன் லோகேஷ் கனகராஜ் அமர்ந்திருக்கும் BTS புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.