Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லோகா : 19 நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த துல்கர் சல்மான்.!!

lokha 19 days collection official update

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியிருந்தது.

30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது என்றே சொல்லலாம்.

10 நாட்களிலேயே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் தற்போது வெறும் 19 நாட்களிலேயே இந்த திரைப்படம் 250 கோடியை கடந்து விட்டதாம்.

இதனை படத்தின் தயாரிப்பாளரான துல்கர் சல்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தடுக்க முடியாத அன்புக்கு நன்றி எனவும் பதிவிட்டு உள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.