Tamilstar
Health

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் விதைகளின் லிஸ்ட்..!

List of seeds that control blood sugar levels

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில விதைகள் பயன்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய் தான் நீரிழிவு நோய். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் உணவில் பெரும்பாலும் கட்டுப்பாட்டுடனும் டயட்டும் இருப்பது வழக்கம். அப்படி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சில விதைகளும் இருக்கின்றன. என்னென்ன என்று பார்க்கலாம்.

பூசணி விதை எடுத்துக் கொண்டால் அது உடலில் இருக்கும் இன்சுலின் அளவை சமப்படுத்தி நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. பசி குறைவாக இருந்தால் பலாப்பழ விதைகளை ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர வேண்டும். அப்படி சாப்பிட்டு வந்தால் பசி அதிகரிக்கும்.

மேலும் மாதுளை பழ விதையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்து இருப்பதால் இது உடலில் ரத்தக் கட்டிகளை உருவாக்காமலும் இதய நோயில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

குறிப்பாக தர்பூசணி விதையில் ஆரோக்கியம் நிறைந்துள்ளது. இது ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்த மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. திராட்சை விதையில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் திசுக்களை பாதுகாத்து நீரிழிவு நோயின் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.a