Tamilstar
Health

ரத்தத்தை சுத்தம் செய்யும் உணவுகளின் லிஸ்ட்..!

List of blood cleansing foods

ரத்தத்தை சுத்தம் செய்ய என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.

ரத்தத்தில் அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் சேர்ந்தால் இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது உடலுக்கு பல்வேறு தீங்கை விளைவிக்கும்.

உணவில் பச்சை காய்கறிகள் அதிகமாக சேர்க்கும் போது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைத்து ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் தக்காளியில் இருக்கும் வைட்டமின் சி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

இது மட்டும் இல்லாமல் பூண்டு சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தை அதிகரிக்கவும் மற்றும் சுத்தம் செய்யவும் பயன்படுகிறது.

கேரட் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோயிலிருந்து பாதுகாக்க முடியும். ஓட்சை பால் அல்லது தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைப்பது மட்டுமில்லாமல் இரத்தத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.