சென்னையில் இருந்து மும்பைக்கு சென்ற பாலாமணி (ரம்யா கிருஷ்ணன்) தந்தையை இழந்த தன் மகன் லைகரை (விஜய் தேவரகொண்டா) டீ கடை நடித்தி தனி ஆளாக வளர்த்து வருகிறார். தன்னுடைய கணவரை போன்று மகனை ஒரு எம்எம்ஏ ஃபைட்டராக்கி இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

இதற்காக பிரபலமான பயிற்சியாளரிடம் (ரோனித் ராய்) பயிற்சி பெற அவரை அணுகுகிறார். பணம் இல்லாததால் சேர்க்க மறுக்கும் பயிற்சியாளரிடம் நடந்து முடிந்த ஒரு பழைய சண்டையை நினைவு கூர்ந்து அவரிடம் சேர்கிறார். இதனிடையே லைகரின் சண்டைகளில் வியக்கும் வில்லன் சஞ்சுவின் (விஷு) தங்கை தான்யா (அனன்யா பாண்டே) அவரை காதலிக்க முயற்சிக்கிறார். அவர்கள் இருவரும் காதலித்து சுற்றி வருவது ரம்யா கிருஷ்ணனுக்கு பிடிக்காமல் போக, விஜய் தேவரகொண்டாவின் கனவு பாதிக்கப்படும் என சொல்லி அவரை பிரிக்க முயற்சி செய்கிறார்.

சில காரணங்களால் இவர்களுக்குள் பிரிவு உண்டாகிறது. அதன்பின் முழு கவனத்தோடு லைகர் எம்எம்ஏ-வில் கலந்து கொள்கிறார். லைகர் அவரின் திறமையை நிரூபித்து எம்எம்ஏ-வில் தேசியளவில் சாம்பியனாக வெற்றிப் பெறுகிறாரா? இவரின் கனவு நிறைவேறியதா? காதலி அனன்யா பாண்டேவுடன் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.

கதையின் தேர்வு சிறப்பாக அமைந்திருந்தாலும் திரைக்கதை சற்று சரிவை ஏற்படுத்தியுள்ளது. ஸ்போர்ட்ஸ் டிராமாவை கமர்ஷியலாக காண்பித்து கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் பூரி ஜெகன்நாத். காட்சியமைப்பு மற்றும் எம்எம்ஏ சண்டையை சிறப்பாக வடிமைத்து சற்று சுவாரசியப்படுத்தி உள்ளார். திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருக்கும். படத்தின் கதாப்பாத்திரங்களின் தேர்வை சிறப்பாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

விஜய் தேவரகொண்டா எம்எம்ஏ ஃபைட்டராகவே தனது உடல் தோற்றத்தை மாற்றி அவரின் நடிப்பின் மூலம் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். சண்டை காட்சிகளில் அவர் தேர்ந்த ஃபைட்டராகவே மாறியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தி இருந்தாலும் திக்குவாய் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு சற்று கவனம் சிதற வைக்கிறது. அனன்யா பாண்டேவின் நடிப்பு பெரிதாக கைக்கொடுக்கவில்லை என்றாலும் சில இடங்களில் ரசிக்கும் படியான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரோனித் ராய் ஆகியோர் தங்களின் முதிற்சியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளனர். ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா அவருக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். சண்டை காட்சிகளில் பார்ப்பவர்களை அந்த களத்திற்கே கொண்டு சென்றிருக்கிறார். ஸ்போர்ட்ஸ் படத்தில் தேவையற்ற இடங்களில் இடம்பெறும் பாடல்கள் கவனத்தை சிதற வைத்திருக்கிறது. இருந்தும் பாடல்கள் பின்னணி இசையின் பணியை சுனில் காஷ்யப், விக்ரம் மாண்ட்ரோஸ், தனிஷ்க் பாக்சி ஆகியோர் செய்துள்ளனர். மொத்ததில் லைகர் வீரம் குறைவு.

liger movie review
jothika lakshu

Recent Posts

Modha Rathri Official Trailer

Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar

19 hours ago

Ayyayo Ammaadi Lyrical Video

Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…

20 hours ago

Irumudi Official Tamil Trailer

Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…

20 hours ago

Manamae Pogumo Lyrical Video

Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…

20 hours ago

Pyaar Prema Kalyanam Official Trailer

Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India

20 hours ago

கழுத்தில் அறுவை சிகிச்சை… அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஷகீலாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…

21 hours ago