Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எல் ஐ சி படப்பிடிப்பு தளத்தில் ஸ்னீக் பீக் வீடியோ வெளியிட்ட படக்குழு

lic-movie latest update

இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ‘எல்.ஐ.சி’ படத்தின் படப்பிடிப்பு தள ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஷோஃபா விற்கும் வீடியோ மூலம் சமூக வலைதத்தில் பிரபலமான ‘Sofa Boy’ சிறுவன் முகமது ரசூல் படக்குழுவினரை விற்பது போன்று காமெடி செய்யும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவில் ‘எல்.ஐ.சி’ டீம் நியூ பப்ளிசிட்டி மேனேஜர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.