Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நான் கண்ணில் கண்ட முதல் லெஜன்ட் விஜய்”: மிஷ்கின் பேச்சு

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் படம் லியோ. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது. படம் வெளியாகி 12 நாட்களில் ரூ. 540 கோடி வசூலித்து இருப்பதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்-விளையாடு அரங்கில் நடைபெற்றது.

லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின், “எனக்கு இரண்டு லெஜன்ட் தெரியும். ஒன்று மைக்கேல் ஜாக்சன், மற்றொன்று புருஸ்லீ. நான் கண்ணில் கண்ட முதல் லெஜன்ட் விஜய். அவர் சினிமாவிலும் ஹீரோ, நிஜத்திலும் ஹீரோ. ஒவ்வோரு துளியிலும் அவரது உழைப்பு இருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்,” என்று தெரிவித்தார்.

Leo success meet Mysskin speech Viral
Leo success meet Mysskin speech Viral