Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாத்தி படத்தின் இடைவெளியில் லியோ படத்தின் ப்ரோமோஷன். தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு

leo-promo-will-be-screened-during-interveal-of-vaathi movie

நடிகர் தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இன்று நேரடியாக வெளியானது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சம்யுக்தா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடித்திருக்கிறார்.

கல்வியை மையமாகக் கொண்டு வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களை அதிக அளவில் குஷிப்படுத்தும் வகையில் வாத்தி திரைப்படத்தின் இடைவெளி நேரத்தில் தளபதி விஜயின் லியோ டைட்டில் டீசரை வெளியிட்டு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பிரமோஷனை வேற லெவலில் செய்து வருகிறது. தற்போது திரையரங்குகளில் இந்த டீசரை கொண்டாடும் ரசிகர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.