leo-movie-vijay-trisha-latest-photo
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது திரைப்படமாக உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதற்காக லியோ படக்குழுவினர் சமீபத்தில் சிறப்பு விமான மூலம் பயணம் செய்தனர். அதன் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்நிலையில் அந்த சிறப்பு விமானத்தின் நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில், விஜய் திரிஷா இணைந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “அருமையான ஜோடி! எங்களைத் தேர்ந்தெடுத்த திரிஷா மற்றும் விஜய் சார் அவர்களுக்கு நன்றி. உங்கள் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ஸ்ருதி முடிவு ஒன்று எடுக்க, நீத்து செய்த செயலால் கடுப்பாகி உள்ளார் ரவி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…