லியோ படம் முன்பதிவில் ஏற்பட்ட சிக்கல்.. ஷாக்கான ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ‘லியோ’ படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவையில் உள்ள பிரபல திரையரங்கான கே.ஜி.சினிமாஸ் திரையரங்கில் ‘லியோ’ படத்தின் பால்கனி டிக்கெட்டுக்காக ரூ.192 வசூலிக்கப்படும் போது அதனுடன் காம்போ பேக்காக ரூ.400 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கு ஜி.எஸ்.டி எல்லாம் சேர்த்து ரூ.450 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த காம்போ பேக்கில் டிக்கெட் வாங்குபவர்கள் டிக்கெட் எடுக்கும் போது பாப்கான், குளிர்பானம் போன்றவற்றையும் உடனடியாக சேர்த்து பதிவு செய்து வாங்கி செல்ல வேண்டும் என்று திரையரங்க ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும், காம்போ பேக் இல்லாமல் வெறும் ரூ.192 கொண்ட பால்கனி டிக்கெட் கொடுக்க ஊழியர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். “,

leo-movie-ticket issue viral
jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

15 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

15 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

16 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

16 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

16 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

16 hours ago