கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்து காஷ்மீரில் கடும் குளிரில் தீவிரமாக உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அனிருத் இசை அமைப்பில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வரும் நிலையில் காஷ்மீரில் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் இணைந்து பிறந்தநாள் கொண்டாடும் செலிப்ரேஷன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது லியோ திரைப்படத்தின் ப்ரொடக்ஷன் டிசைனர் சதீஷ்குமார் அவர்களின் பிறந்தநாளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி செலபிரேட் செய்துள்ளனர். அப்போது அவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
Have a Bloody sweet Blast @ArtSathees ney.
Happy Birthday ????❤️.#Leo pic.twitter.com/zxz1mn5iWC— Rathna kumar (@MrRathna) February 17, 2023