Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் காஷ்மீரில் படபிடிப்பு தொடங்கிய லியோ படக்குழுவினர்.!! வெளியான சூப்பர் தகவல்

leo movie shooting latest update

கோலிவுட் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது இப்படத்திற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பிற்காக லியோ படக்குழு காஷ்மீருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, காஷ்மீரில் நடைபெற்ற இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் போது விடுபட்டிருந்த சில காட்சிகளை படமாக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தலைமையில் லியோ படக்குழு மீண்டும் காஷ்மீருக்கு சென்று இருப்பதாகவும், அங்கு 10 நாட்களுக்கு தங்கி இருந்து விடுபட்ட படப்பிடிப்புக் காட்சிகளை முடிக்க அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

leo movie shooting latest update
leo movie shooting latest update