Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“அமைதியாய் இருந்து சண்டையை தவிருங்கள்”:லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வைரல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க.. நெருங்க இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், லியோ படத்தின் தெலுங்கு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்ட தெலுங்கு போஸ்டரில் “அமைதியாக இருந்து சண்டையை தவிருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை படக்குழு எக்ஸ் பக்கத்திலும், நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

Leo movie poster update
Leo movie poster update