தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சமீபத்தில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான நா ரெடிதான் வரவா பாடல் வெளியாகி தற்போது வரை இணையதளத்தில் மாஸ் காட்டி வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் இப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கும் முக்கிய பிரபல நடிகர் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.
அதாவது தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி எடுத்து அனைவருக்கும் பரிச்சயமான பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
