தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்டீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் ஏற்கனவே பல உச்ச நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் காஷ்மீர் படப்பிடிப்பு தளத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களை தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி இணைந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இது குறித்து அவர் பகிர்ந்து இருக்கும் தகவலும் வைரலாகி வருகிறது.
Actor Babu Antony joins #Leo sets ???????? @actorvijay @Dir_Lokesh pic.twitter.com/oNazAjUGut
— #LEO OFFICIAL (@TeamLeoOffcl) March 10, 2023