leo-movie-latest-update
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.
திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், பாபுஆண்டனி என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படகுழு தீவிரம் காட்டி வருகிறது.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் முதல் பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்ததை தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 5-ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான உறுதியான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…