simbu-movie-music-director-update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் “பத்து தல” திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக தனது 48வது திரைப்படமாக உருவாகும் “STR 48” என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். இப்படத்திற்காக தற்போது உடல் எடை குறைத்து செம்ம ஸ்டைலாக மாறியுள்ள சிம்பு இதில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாகவும் ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி STR 48 திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிம்புவின் முக்கிய படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் தற்போது VTK, பத்து தல திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்திற்கும் இசையமைக்க இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…