Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர். வைரலாகும் தகவல்

leo-movie-latest-update

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக திகழும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. பலத்தை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அனிருத் இசையமைப்பில் தீவிரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணியில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் நிலையில் அவ்வப்போது படத்தில் இணைந்திருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது லியோ திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான முத்து இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதனை பிரதீப் முத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஏற்கனவே நடித்த ’மீசைய முறுக்கு’ ’வீட்ல விசேஷம்’ திரைப்படத்தில் நடித்ததோடு ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளதாக குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டாலும் முத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதால் ‘லியோ’ திரைப்படத்தில் அவர் நடித்து வருவது உறுதியாகி உள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

leo-movie-latest-update
leo-movie-latest-update