தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இதுவரை காஷ்மீரில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்து இருப்பதை தொடர்ந்து மீதம் இருக்கும் 60% படப்பிடிப்பை அடுத்த கட்டமாக சென்னையில் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு இன்று சென்னையில் தொடங்கியுள்ளனர். இதில் விஜயின் காட்சிகளை படமாக்க உள்ளனர். இது தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.
#Leo next schedule begins from today in Chennai ????????
Near to 60 Days of shooting left to wrap up the entire movie✅#ThalapathyVijay – #LokeshKanagaraj pic.twitter.com/TjxpGc4rKh— AmuthaBharathi (@CinemaWithAB) April 5, 2023