Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்

leo movie audio launch update

நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் படிக்க மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்து கொண்டார்.

இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், ‘லியோ’ படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 5-ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

leo movie audio launch update
leo movie audio launch update