Leo flashback may even be a lie- Lokesh stirs controversy
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்திருந்தார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சனம் ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.
இப்படம் என்னதான் வசூலை குவித்து வந்தாலும் இதன் பிளாஷ் பேக் காட்சிகளை ரசிகர்கள் முதல் நாளிலிருந்தே விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘லியோ படத்தின் பிளாஷ் பேக் காட்சிகள் பொய்யாக கூட இருக்கலாம்’ என்று லோகேஷ் கனகராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், “நேர நெருக்கடி காரணமாக 45 நிமிடங்கள் இருந்த பிளாஷ் பேக் காட்சிகளை 20 நிமிடங்களாக குறைத்தேன், மேலும், நீங்கள் கதையை பார்த்திபன் கூறி கேட்கவில்லை, கதையை இருதயராஜாக நடித்த மன்சூர் அலிகான்தான் கூறியுள்ளார், அது பொய்யாக கூட இருக்கலாம்” என்று கூறினார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ‘படத்தின் இறுதியில் ஏதாவது ஒரு காட்சியில் இது பொய் என்று தெரிவித்து இருக்கலாம். படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றபின் பேட்டியில் இப்படி சொல்வது ஏற்புடையது அல்ல’ என்று விமர்சித்து வருகின்றனர்.
முருங்கைக் கீரை சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முருகன் வித்யா திருமணம் நடந்து முடிய, ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…