Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் ட்ரெண்டாகும் விஜய்யின் ‘லியோ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Leo First Look

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் விஜய்யின் பிறந்தநாளான இன்று (ஜூன் 22) வெளியாகும் என போஸ்டர் வெளியானது. இதையடுத்து ‘நா ரெடி’ பாடலின் புரோமோ வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டு விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ‘லியோ’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது இப்படத்தின் முதல்தோற்ற போஸ்டர் (ஃபர்ஸ்ட் லுக்) வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.