லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” விஜய்யின் பிறந்தநாளான இன்று (ஜூன் 22) வெளியாகும் என போஸ்டர் வெளியானது.
இதையடுத்து ‘நா ரெடி’ பாடலின் புரோமோ வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டு விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களால் ஆங்காங்கே கொண்டாட்டங்களும் கலைகட்டி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு சரியாக இரவு 12 மணிக்கு 3டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லியோ படத்தின் ப்ரோமோ காட்சியை மையமாக வைத்து இந்த 3 டி வீடியோவை உருவாக்கி இருக்கிறார் கிராபிக் டிசைனரான மேடி மாதவன் என்பவர். விஜய்யை தத்ரூபமாக 3டி அனிமேஷனில் உருவாக்கி காட்சிகளை சினிமா காட்சிகளுக்கு ஈடாக தயாரித்துள்ளார்.
இந்த வீடியோவை மேடி மாதவன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.. இது உங்களுக்காக” என்ற பதிவுடன் பகிர்ந்துள்ளார். ஃபேன் மேட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
LEO 3D Animated Video.
Dear @actorvijay anna, this is for you????
#HBDThalapathyVIJAY #Leo @actorvijay@Jagadishbliss @7screenstudio@RamVJ2412 @GuRuThalaiva @OTFC_Off @VijayFansTrends pic.twitter.com/SzY1fUmdIg
— Maddy Madhav (@MaddyMadhav_) June 21, 2023