சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எலுமிச்சை பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக உணவில் அதிகமாக கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சம் பழத்தினை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ஜீரண சக்தி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கான சூப்பர் ஃபுட் என்றும் கூறுவார்கள்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும் சிறு துளி எலுமிச்சை சாற்றை சேர்த்து சாப்பிட்டு வருவது சிறந்த முறையாகும். மேலும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு குடித்து வந்தால் இன்னும் கூடுதல் நன்மையை அளிக்கும். அப்படி குடிக்கும்போது அதில் சர்க்கரையோ இனிப்புகளையோ சேர்க்கக்கூடாது.
எலுமிச்சை பழங்களை சாலட்களிலும் கலந்து சாப்பிடலாம்.
மாவு சத்து நிறைந்த பொருட்களில் எலுமிச்சம் பழத்தை சேர்த்து சாப்பிடுவது நம் உடலின் சமநிலையை தூண்டி ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதுபோன்று உண்ணும் உணவுகளில் எலுமிச்சை பழச்சாற்று கலந்து சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.