நடிகர்களை வைத்து விளம்பரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் சரவணா ஸ்டோர்ஸ் தொடர்பான விளம்பரங்களில் லெஜெண்ட் சரவணன் தானே நடித்து பிரபலமானார். இவர் தன்னுடைய தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் முதல் படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் ஆக்ஷன் காட்சி புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் லெஜெண்ட் சரவணன் அறிமுகமாகிறார். இரட்டை இயக்குநர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இந்த படத்தை இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபு, விவேக், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
Pictures of #LegendSaravanan from his debut film shoot go viral! The star is seen indulging in some intense action sequences. #SaravananArul @Jharrisjayaraj@VelrajR @AntonyLRuben @moorthy_artdir @Vairamuthu @SnehanMNM @pavijaypoet @jdjeryofficial @onlynikil #NikilMurukan pic.twitter.com/HZVzXx2uuF
— DT Next (@dt_next) March 1, 2021