லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.
மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து சமீபத்தில் லெஜண்ட் சரவணன் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது இவர் காஷ்மீரில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில், “அடுத்த படத்துக்கு எல்லாமே தயாராகிவிட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்’என குறிப்பிட்டுள்ளார். லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
All Set for#LegendsNext
Process Started….
Revealing Soon…#Legend#LegendSaravanan#Anbanavan pic.twitter.com/O1Dmf88P4l— Legend Saravanan (@yoursthelegend) January 19, 2024