தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா.
தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தொடர்ந்து மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பல ஊர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வாங்கி கொடுக்கிறார்.
சமீபத்தில் கூட ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பள்ளி ஒன்று உதவி இருந்த நிலையில் தற்போது கல்யாணமான ஒரு சில வருடங்களிலேயே கணவர் இழந்து மூன்று மகள்களுடன் எலக்ட்ரிக் ட்ரெயினில் சமோசா விற்பனை செய்து வரும் பெண்ணிற்கு மீண்டும் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உடன் இணைந்து ஆட்டோ வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பலரும் பாலாவுக்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram