Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராமராஜனை பிரிந்ததற்கு காரணம் இதுதான். நளினி வெளியிட்ட தகவல்

latest-news-tamizha-tamizha-nalini-ramarajan

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான விவாத நிகழ்ச்சி தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கருப்பழனியப்பன் விலகிக் கொண்டதைத் தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக சமூக ஊடகவியலாளர் ஆவுடையப்பன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த வாரம் ஜோதிடத்தை நம்பும் மக்கள் ஜோதிடர்கள் என்று இரண்டு பிரிவாக பிரிந்து விவாதங்கள் நடைபெற்றது. எதிர்நீச்சல் ஆதி குணசேகரன், நடிகை நளினி, அர்ச்சனா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் சிலர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அப்போது நளினி ஜோதிடத்தில் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். ஒரு பெரிய ஜோதிடர் சொன்ன மாதிரியே நான் திரை உலகிற்கு வந்தேன் முதன் முதலாக ஜப்பான் கார் வாங்கினேன். பிளைட்டில் பறந்து பறந்து பிஸியாக வேலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பிறந்த பிறகு ஜோதிடர் ஒருவர் உங்கள் குழந்தைகள் வளர வளர ராமராஜரின் நிலை குலையும் என சொன்னதும் எங்களுக்கு பயம் வந்தது. இதற்காக ஜோதிடர்களை கேட்டு பல பரிகாரங்களை செய்தோம் ஆனால் எதுவும் பலன் கொடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் ராமராஜர் என்னை பார்த்து உனக்கு நான் வேண்டுமா? பிள்ளைகள் வேண்டுமா? என கேட்டார். நான் பிள்ளைகளோடு இருந்து கொள்கிறேன் நீங்க தனியாக இருந்து கொள்ளுங்கள் என சொல்லி அவரை பிரிந்து வந்தேன். ஆனால் இன்னமும் எங்களுக்குள் காதல் இருக்கிறது என பேசியுள்ளார்.

ஜோதிடத்தால் தான் இருவரும் பிரிந்து 20 வருடங்களாக தனித்தனியாக வாழ்ந்து வருவதாக நளினி கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

latest-news-tamizha-tamizha-nalini-ramarajan
latest-news-tamizha-tamizha-nalini-ramarajan