Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர்ஸ்களை கொண்ட நடிகைகளின் லிஸ்டில் சமந்தாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பிரபல நடிகை

latest news about actress rashmika mandhana

சினிமாவில் எப்படி முன்னணி நடிகைகளுக்குள் போட்டிகள் நடந்து வருகிறதோ அதேபோல் சமீப காலமாக நடிகைகள் பலரும் சோஷியல் மீடியாக்களில் போட்டி போட்டு பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். அதிலும் பலரும் தங்களது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வைரல் பதிவுகள் போன்றவற்றை வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இதனை சினிமா நடிகைகள் மட்டுமின்றி தற்போது சின்னத்திரை சீரியல் நடிகைகளும் தொடர்ந்து வருகின்றனர்.

சில முன்னணி நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் சில விளம்பர வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அதற்கான கணிசமான தொகையும் பெற்று வருகின்றனர். அந்த அளவிற்கு தங்களது படங்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பல முன்னணி நடிகைகள் தங்களின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கும் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமந்தா, ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, சுருதிஹாசன், கீர்த்தி சுரேஷ், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றன.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர்ஸை பெற்றுள்ள நடிகை யார்? என்பது தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சமந்தாவை பின்னுக்கு தள்ளி ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 3 வது இடத்தில் காஜல் அகர்வால், 4வது இடத்தில் ரகுல் ப்ரீத் சிங், 5வது இடத்தில் பூஜா ஹெக்டே, 6வது இடத்தில் ஸ்ருதிஹாசன், 7வது இடத்தில் தமன்னா, 8வது இடத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 latest news about actress rashmika mandhana

latest news about actress rashmika mandhana