தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஆலியா மானசா. நிஜத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பிரசவம் காரணமாக விரைவில் சீரியலில் இருந்து தற்காலிகமாக வெளியிடுவார் என சொல்லப்பட்டு வருகிறது.
அதற்கேற்றார்போல நாளைய எபிசோட் அமைய உள்ளது. சந்தியாகு கனவை தெரிந்துகொண்ட சரவணன் உங்களை போலீசாக மாற்றுவது என்னுடைய கடமை இனி உங்களுடைய கனவு என்னுடைய கனவு என வாக்கு கொடுக்கிறார். இதனால் சந்தியா போலீஸ் ட்ரைனிங் இதற்காக வெளியூர் செல்வது பல காட்சிகள் மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போலீஸ் ட்ரைனிங் முடிஞ்சு வருவதற்குள் சந்தியா நிஜ வாழ்க்கையில் டெலிவரி முடிந்து பழைய சந்தியாவாக நீங்கள் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் பாரதிகண்ணம்மா சீரியல் வெண்பா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் அவர் ஜெயிலுக்குப் போவது போன்ற காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு பிரசவத்திற்குப் பிறகு அவர் மீண்டும் சீரியலில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


