lalith-kumar-about-leo-movie
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு.
இந்த படத்தின் வெற்றியை தொடங்கி தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்ததை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் கலந்து கொண்ட செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லலித் குமார் பேசிய போது லியோ படத்தின் அடுத்த அப்டேட் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…
Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…