தமிழ் சினிமாவில் பிரபல பெண் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவரது இயக்கத்தில் தற்போது “லால் சலாம்” திரைப்படம் உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கப்பில் தேவ் ஆகியோர் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.
ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் புதிய அப்டேட்டாக, லால் சலாம் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க இருப்பதாகவும் குறிப்பிட்டு நடிகர் ரஜினிகாந்துடன் படக்குழுவினர் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை பதிவிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வைரலாகி வருகிறது.
As the shoot ????️ of #LalSalaam is completely wrapped, the team get together once again to rejoice it! ????✨ Off to the post-production now!#LalSalaam ????
???? @rajinikanth
???? @ash_rajinikanth
???? @arrahman
???? @TheVishnuVishal & @vikranth_offl
???? @DOP_VishnuR
⚒️ @RamuThangraj… pic.twitter.com/znDsyIfuzH— Lyca Productions (@LycaProductions) August 9, 2023