இந்திய திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். மாபெரும் நட்சத்திரபட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் ரஜினிகாந்த் குறித்த லேட்டஸ்ட் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் லால் சலாம். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்து வரும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு கண்டிஷன் போட்டுள்ளாராம் அதாவது, நடிகர் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 170 திரைப்படத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார். அதனால் அதற்கு முன்பாகவே லால் சலாம் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்றும் தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்கியதும் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் ஐஸ்வர்யாவுக்கு கண்டிஷன் போட்டுள்ளாராம்.
அதனால் லால் சலாம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை மும்பையில் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் ரஜினியின் காட்சிகளை மட்டும் முழுமையாக படமாக்க ஐஸ்வர்யா திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி உள்ளது.
