Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லால் சலாம் படத்தின் ஷுட்டிங் குறித்து வெளியான சூப்பர் தகவல் இதோ

lal salaam movie shooting starting update

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல மொழி பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

தீவிரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு வேதத்தில் நடிக்க இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக இருக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் ஆகியோர் கிரிக்கெட்டர்களாக நடிக்க இருக்கின்றன.

இந்நிலையில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 7 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.