Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லால் சலாம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட படக்குழு..வைரலாகும் போஸ்டர்

lal-salaam-movie latest news

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.லால் சலாம் போஸ்டர்இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘லால் சலாம்’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இப்படம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.