Tamilstar
Health

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வெண்டைக்காய் நீர்..!

ladies finger water helps diabetic patients

நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் நீர் பயன்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவரும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான். இந்த நோய் வந்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இது மட்டும் இல்லாமல் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று என அனைவருக்கும் தெரியும். அப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வெண்டைக்காய் நீரை பயன்படுத்துவது குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து கொள்ள வேண்டும். அதில் ஐந்து கழுவிய வெண்டை காய்களை குறுக்காக வெட்டி இரவு முழுவதும் அந்த தண்ணீரில் ஊற வைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.

இப்படி தொடர்ந்து குடித்து வரும்போது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக வெண்டைக்காயில் வைட்டமின் பி, சி, போலிக் அமிலம், கால்சியம் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே வெண்டைக்காய் நீரை பயன்படுத்தி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொண்டோம்.