Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கன்னத்தில் காயத்துடன் குஷ்பு.. வெளியான அதிர்ச்சி புகைப்படம்

Kushbu in Shocking Viral Photo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பணியாற்றிய இவர் தற்போது பிஜேபியில் இணைந்து அரசியலில் ஈடுபடுகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் குஷ்பு தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணத்தில் யாரோ அறைந்தது போன்ற காயத்துடன் புகைப்படத்தை வெளியிட்டு வன்முறைக்கு நோ சொல்லுங்க என பதிவு செய்துள்ளார்.

இதனால் குஷ்புவை அறைந்தது யார் என அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது குறித்து விசாரிக்கையில் தற்போது குஷ்பு எழுதி இயக்கி வரும் மீரா என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். அந்த சீரியல் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட புகைப்படம்தான் இது என தெரியவந்துள்ளது. வெகுவிரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

 

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)