Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெயம் ரவி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் அப்டேட்

krithika-udayanidhi-stalin-to-direct-jayam-ravi

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து JR30, சைரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் ஜெயம் ரவியின் 33வது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி, ஜெயம் ரவியின் 33 வது திரைப்படத்தை தமிழில் பிரபல பெண் இயக்குனராக விளங்கும் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முழுமையான காதல் கதையாக உருவாக இருக்கும் இதில் கதாநாயகியாக நடிகை நித்யா மேனன் நடிக்க இருப்பதாகவும் இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் மற்றும் ஏ ஆர் ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க போகும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது . இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.