தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. பல மொழிகளில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள எதற்கும் காமெடிக்கு இன்றுவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். கமலுக்கு ஜோடியாக கூட ஒரு படத்தில் நடித்திருப்பார். மேலும் இவர் தளபதி விஜயுடன் ஷாஜகான் படத்தில் நடித்திருந்தார். பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெர்சல் படத்தில் இணைந்து நடித்தார்.
அதேபோல் அஜித்துடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள கோவை சரளா நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஸ்வாசம் படத்தில் இணைந்து நடித்தார். இந்த நிலையில் இருவரைப் பற்றியும் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அஜித் விஜய் ரெண்டு பேருமே இன்னைக்கு வேற லெவல்ல இருக்காங்க. ஆனாலும் காலையில ஏழு மணிக்கு செட்டுக்கு வந்திடுவாங்க.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர்களோடு நடிப்பதால் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற குழப்பம் இருந்தது. ஆனால் இருவருமே ரொம்ப சாதாரணமாக பல வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படித் தன் பழகினார்கள். நான் என்னவோ பெரிய நடிகை மாதிரி எனக்கு மரியாதை கொடுத்து நடந்துக்கிட்டாங்க என கூறியுள்ளார்.
