Tamilstar
Health News

கொண்டைக் கடலையில் இருக்கும் அற்புதப் பயன்கள்..

kondaikadalayin nanmaigal

கொண்டைக்கடலையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

பொதுவாகவே அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று கொண்டை கடலை. கொண்டைக்கடலையில் புரதம், வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

கொண்டைக்கடலை உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடலாம். இதில் இருக்கும் பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இது மட்டும் இல்லாமல் இதயத்திற்கு போதுமான ஊட்டச்சத்து இதை உட்கொள்வதன் மூலம் நமக்கு கிடைக்கிறது. இதில் இருக்கும் இரும்புச்சத்து இதயத்திற்கு மட்டுமல்லாமல் உடலில் பல பிரச்சனைகளுக்கு உதவுகிறது.

கொண்டைக்கடலையில் இருக்கும் நார்ச்சத்து செரிமான செயல்பாட்டில் பெருங்குடலுக்கு உதவுகிறது. ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் தினமும் கொண்டை கடலை சாப்பிடுவது சிறந்தது.

இதில் இருக்கும் ஊட்டச்சத்து எலும்பு மூட்டு வலிகளில் ஏற்படும் பிரச்சனையை குறைக்கிறது.

எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.