இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகர் ரஜினியை கொல்கத்தா அணி வீரர்கள் நேரில் சந்தித்து எடுத்திருக்கும் புகைப்படங்கள் நெகிழ்ச்சியான பதிவுடன் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, பிரபல கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி & வெங்கடேஷ் ஆகியோர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளனர். இது குறித்து வருண் சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், வானத்தில் லட்சக்கணக்கான ஸ்டார்களை நாம் தினமும் பார்க்கலாம், ஆனால் சூப்பர் ஸ்டாரை பார்ப்பது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். அது நடந்து விட்டது. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் அது ரஜினிதான். அவர் எங்களிடம் பேசிய போது ஒரு குடும்ப உறுப்பினராக உணர்ந்தேன். லவ் யூ தலைவா. என்று குறிப்பிட்டு தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அது தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.
You can see a million stars in the night sky daily. But seeing this Super Star is a once in a lifetime occurrence.Yes!!! It happened !!!
With " THE ONE & ONLY SUPER STAR @rajinikanth " !!!
Seriously felt like a family member the way he spoke to us. Love you Thalaivaa.❤️❤️❤️ pic.twitter.com/utcFiE9g7l— Varun Chakaravarthy (@chakaravarthy29) May 16, 2023

