அண்ணன் கொடுத்த விஷத்தால் சிறுநீரகம் செயலிழந்தது – பொன்னம்பலம் அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்துக் கொண்டார். அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வைரலானது.

இதையடுத்து பலரிடம் உதவி கேட்டார். சரத்குமார், கமல், சிரஞ்சீவி என பலர் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர். இதைத்தொடர்ந்து பொன்னம்பலத்தின் சொந்த அக்கா மகனே தன் கிட்னியை கொடுத்து அவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவினார். தற்போது இவர் உடல் நலம் தேறி வருகிறார்.பொன்னம்பலத்தின் சிறுநீரக பிரச்சினைக்கு குடிப்பழக்கம் தான் காரணம் என பல்வேறு வதந்திகள் கிளம்பியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பொன்னம்பலம் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ” குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதால் எனது சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாக பலர் நினைத்தனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. என் தந்தைக்கு நான்கு மனைவிகள். மூன்றாவது மனைவியின் மகன் என் மேலாளராக சில காலம் பணிபுரிந்தார். நான் அவரை மிகவும் நம்பினேன். ஆனால், ஒரு கட்டத்தில் அவர் எனக்கு ஸ்லோ பாய்சனை உணவில் கலந்து கொடுத்தது தெரியவந்தது. நான் நல்ல நிலையில் இருக்கிறேன். அவனால் நன்றாக வாழ முடியவில்லை என்ற பொறாமையால் இதை அவர் செய்தார்” என்று கூறினார்.

Suresh

Recent Posts

VOWELS – An Atlas of Love Official Trailer Tamil

  https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI

11 hours ago

Rai Rai Raa Raa Song (Tamil)

Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…

12 hours ago

Leader – Official Teaser

Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU

12 hours ago

Manithan Deivamagalam – Official Teaser

https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-

12 hours ago

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…

15 hours ago

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

15 hours ago