Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க

Khushbu's daughter who will be the heroine.. and that too is the title of Ajith's film! Who can even watch it?

கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க

குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான சினிமாவில் ‘ஆரம்பம்’ படம் மூலம் அறிமுகம் ஆகிறார். சுஜேஷ் ஈப்பன் இயக்குகிறார். அவந்திகாவுக்கு அம்மாவாக நடிக்கிறார் சரிதா.

இந்த படத்தின் பூஜை கேரளாவில் நடந்தது. தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் போஸ்டர்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது திரைப் பயணம் துவங்கியதை சந்தோஷமாக தெரிவித்திருக்கிறார் அவந்திகா.

‘ஆரம்பம்’ படத்தில் இந்திரன்ஸ், விஜயராகவன், அல்தாப் சலிம், கலாபவன் ஷாஜோன், விஜி வெங்கடேஷ், ரமேஷ் கோட்டயம், ரஞ்சன் தேவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தற்போது கேரளாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மலையாளத்தை அடுத்து தமிழ் படத்தில் அவந்திகா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அவந்திகா சுந்தர் கூறியதாவது, ‘என் பெற்றோர் தான் என்னை திரையுலகில் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. திரையுலகில் உங்களுக்கு தெரிந்தவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைக்கவும் என்று என் அம்மாவிடம் நான் கேட்கலாம். நானாக நடிகையாக வேண்டும் என்பது தான் என் பெற்றோர் மற்றும் என்னுடைய விருப்பம். என் பெற்றோரின் ஆதரவே இல்லாமல் நான் வாய்ப்பு பெற்றுவிட்டேன் என்று சொல்ல முடியாது. எதற்கெடுத்தாலும் அம்மாவுடன் என்னை ஒப்பிட்டு பேசுவார்கள் என்பது தெரியும். விமர்சனங்களை பார்த்து பயப்பட முடியுமா’ என கூறியுள்ளார் அவந்திகா.

Khushbu's daughter who will be the heroine.. and that too is the title of Ajith's film! Who can even watch it?
Khushbu’s daughter who will be the heroine.. and that too is the title of Ajith’s film! Who can even watch it?