Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“கே ஜி எஃப் மூன்றாம் பாகம் விரைவில் தொடங்கும்”: இயக்குனர் பிரசாந்த் நீல்

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். தேசிய படத்தில் மூலம் உலகம் அறியும் நடிகரான இவர் அதன்பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்தார்.

இந்தப் படத்தில் இரண்டாம் பாகத்தில் யாஷ் இறந்தது போல காட்டப்பட்டாலும் இறுதியாக மூன்றாம் பாகத்திற்கான லீட் இந்த படத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.

இப்படியான நிலையில் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்து பேசி உள்ளார்.

அதாவது, கே.ஜி.எப் 3 படம் விரைவில் தொடங்கும் எனவும் அதற்கான ஸ்கிரிப்ட்டை ஏற்கனவே எழுதி விட்டேன். மூன்றாம் பாகம் உருவாகும் என்பதால் தான் இரண்டாம் பாகத்தில் அப்படி ஒரு லீட் கொடுத்திருந்தோம். எல்லா வேலைகளும் முடிந்து மூன்றாம் பாகம் விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

KGF 3 Movie Latest update viral
KGF 3 Movie Latest update viral