kerala-singer-who-learned-tamil-for-sivakarthikeyan
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10-வது சீசன் துவங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள். பல பாடகர்களின் முன்னணி மேடையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் இந்த 10-வது சீசனில், கர்நாடக சங்கீதப் பின்னணி, கனா பாடல் பின்னணி எனப் பலவிதமான களத்திலிருந்தும் பலவிதமான போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். இம்முறை நடந்துவரும் நிகழ்ச்சியில் பல நெகிழ்வான சம்பவங்கள் நடந்து வருகிறது.
கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி, சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, தற்போது தமிழில் எம்.ஏ பட்டப்படிப்பை படித்து வருகிறார். இவரின் குரலும், பாடல்களும் அனைவரது பாராட்டையும் பெற்றது. வெட்டிங்க் சுற்றில் பலகுரல்களில் பாடி அசத்திய லின்சி எனும் பாடகியின் கதையும் குரலும் பலரையும் நெகிழ வைத்தது. இசையால் காதலித்து இணைந்த தம்பதியாக ஜொலிக்கும் லின்சி தம்பதியின் திருமணத்தை ஒத்துக்கொள்ளாமல் இருந்த, லின்சியின் தந்தை நிகழ்ச்சிக்கு வந்ததோடு, லின்சியை கட்டியணைத்து பாராட்டியது அனைவரையும் உருக வைத்தது. பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களுடன் பரபரப்பாக நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இந்த 10-வது சீசனிலும் களைகட்டி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…