Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லைப் பார்ட்னர் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்

keerthy-suresh-spoke-about-her-future-husband

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிஸியாக பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தமிழில் இவரது நடிப்பில் அடுத்ததாக உதயநிதியுடன் இணைந்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இவர் தான் கீர்த்தி சுரேஷின் பாய் ஃப்ரெண்ட், வருங்கால கணவர் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, அவர் தன்னுடைய வருங்கால கணவர் இல்லை. என்னுடைய லைப் பார்ட்னர் குறித்து நானே அறிவிப்பேன். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என பதிவு செய்துள்ளார்.